Friday, 15 May 2015

268 உதவி புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்கள்: இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வியாழக்கிழமை (07.05.2015)வெளியிட்ட அறிவிப்பில், காலியாகவுள்ள 268 உதவி புள்ளியியல் ஆய்வாளர் (Assistant Statistical Investigator)பணியிடங்கள் நேரடியாக எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வுஅடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ள இப்பணிக்கு இணையதளம் (www.tnpscexams.net) மூலமாக மட்டுமே விண்ணபிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 3-ஆம் தேதி ஆகும். இதேபோல் வங்கி, அஞ்சலகங்கள் மூலமாக விண்ணப்பக் கட்டணம்- தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த ஜூன் 5 கடைசி நாள்.
கல்வித்தகுதி:
புள்ளியல் பாடத்தில் இளங்கலைப்பட்டம் அல்லது கணிதம், கணினி அறிவியல், பொருளாதாரம், படித்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு இளநிலைப் பட்டத்துடன் பொருளாதாரம், கணித பொருளாதாரம் போன்ற சிறப்பு பாடங்களுடன் முதுநிலையில் பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. கொள்குறி வகை என்ற அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.50 ஆகும்/ தேர்வுக் கட்டணம் ரூ.100. எழுத்துத் தேர்வின் போது பொருளாதாரம், பொது அறிவுடன், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

முதல் தாள் தேர்வானது ஜூலை 1 ஆம் தேதி காலை 10 மணிக்கும், இரண்டாம் தாள் மதியம் 2.30 தொடங்கி நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம்

இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு www.tnpsc.gov.in இணையத்தில் அறியலாம்.

No comments:

Post a Comment