Tuesday 16 June 2015

ஆய்வக தொழில் நுட்புநர் பணிக்கு தகுதியானவர்கள் சரிபார்க்க வாய்ப்பு

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட ஆய்வக தொழில் நுட்புநர் (லேப் டெக்னீசியன்) நிலை 3 பணிக்கு தகுதியான பதிவுதாரர்கள் பதிவை செவ்வாய் (ஜூன் 16), புதன்கிழமைகளில் (ஜூன் 17) நேரில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் க.காந்தி வெளியிட்ட அறிக்கை:
ஆய்வக தொழில் நுட்புநர் பதவிக்கான உத்தேச பட்டியல் தயாரிக்கும் பணி வேலைவாய்ப்பு துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னுரிமையற்றோர் பிரிவில் எஸ்.சி.ஏ, எஸ்.டி வகுப்பைச் சேர்ந்த அனைவரும், 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி வரை பதிவு செய்த பி.சி.எம். பிரிவினர், 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை பதிவு செய்த எஸ்.சி, எம்.பி.சி, பி.சி. ஓ.சி பிரிவைச் சேர்ந்த பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு வந்தால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றார் அவர்.

No comments:

Post a Comment