Sunday, 24 May 2015

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார் ஆட்சியர்.
இதுகுறித்து, ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள நடமாடும் சிகிச்சைப் பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊர்தி ஓட்டுநர்க்கான தகுதிகள்: நான்கு சக்கர இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத தொகுப்பூதியம் ரூ.8 ஆயிரம்.
ஊர்தி உதவியாளர்: மாத தொகுப்பூதியம் ரூ. 5 ஆயிரம்.  கல்வித் தகுதி 8 ஆம் தோல்வியுற்றவர்கள்.  மேற்கண்ட இரு காலிப்பணியிடங்களுக்கு, 1.7.2014 அன்றைய தேதியில் விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தும், 32 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருத்தல் அவசியம்.
    பொதுப்போட்டி, முன்னுரிமையற்றவர் மேற்கண்ட தகுதியுடையோர் "மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,அறை எண் 17, தரை தளம், அரியலூர்' என்ற முகவரிக்கு வரும் மே 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment