குரூப் 2 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, துணை வணிக வரி அலுவலர், துணை பதிவாளர் உள்ளிட்ட ஆயிரத்து 241 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க மே 29ஆம் தேதி கடைசி நாள். இந்த பணிகளுக்கான குரூப் 2 தேர்வு ஜுலை மாதம் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment