Saturday 13 June 2015

இந்திய வனப்பணிக்கான யூபிஎஸ்சி தேர்வு அறிவிப்பு



இந்திய வனப்பணி (Indian Forest Service) பிரிவில் அதிகாரி அந்தஸ்து பணிகளில் சேருவதற்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு அறிவிப்பு: 10/2015-IFoS
தேர்வின் பெயர்: Indian Forest Service Examination, 2015
வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 21 - 32க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics, Zoology, Agriculture, Forestry, Engineering போன்ற துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
எழுத்து தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர், புதுச்சேரி, திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, பெங்களூர், ஹைதராபாத் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment